இலங்கை பிரதான செய்திகள்

பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ பதவி நீக்கம் :


சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றிய அருந்திக்க பெர்னாண்டோ உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 46(3)(அ) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கேற்ப இந்த பதவி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஜனாதிபதி செயலக ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக பெர்ணான்டோ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த இவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த அரசு தொடர்பாக அண்மைக்காலமாக அதிருப்தியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *