விளையாட்டு

உலக அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச வீரர்களைக் கொண்ட உலக அணி பங்கேற்கும் போட்டித் தொடர் ஒன்று பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வருகின்றது.   உலக அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் டுவன்ரி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி உலக அணியை 20 ஓட்டங்களினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் பாபர் அசாம் 86 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உலக அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணித் தலைவர் F du Plessis 29 ஓட்டங்களையும், ஹாசீம் அம்லா 26 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *