பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை நேரடித் தகுதி பெற்றுக் கொண்டுள்ளது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை நேரடித் தகுதி பெற்றுக் கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்த தோல்வியுடன் 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடியாக பங்குபற்றும் சந்தர்ப்பத்தை இலங்கை பெற்றுக் கொண்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டித் தொடரை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றியீட்டினால் மட்டுமே உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் நேரடித் தகுதி பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்பட்டது.

நேற்று நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இங்கிலாந்து அணி ஏழு விக்கட்டுகளினால் வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளது. இதன்டி, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *