இலங்கை பிரதான செய்திகள்

கௌரவ முதலமைச்சர் வட மாகாணம் – ஐயா……

நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்
கௌரவ முதலமைச்சர்
வட மாகாணம்
ஐயா……
கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் யாழ் – பருத்தித்துறை வீதியில் புத்தூர் 9 ஆம் கட்டையில் வடிகாலமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக வீதியோரத்தில் பாரிய அளவில் நிலம் வெட்டப்படுகின்றது.
இவ்வாறு வெட்டப்பட்ட மண் மற்றும் நிர்மாண வேலைகளுக்கான கற்கள் வீதியோரத்தில் குவிக்கப்பட்டும் உள்ளன. எனினும் சாதாரணமாகவே விபத்துக்கள் நடைபெறும் பாரிய வளைவினை உடைய இவ் வீதியில் வீதியோரத்தில் வேலைகள் நடைபெறுவதற்கான எந்தச் சமிஞையும் கிடையாது. தனியே இரண்டு கொங்கிறீட் கட்களால் முண்டு கொடுக்கப்பட்டு மஞ்சல் நிற சிறு துண்டு பொலித்தீன் சுற்றப்பட்ட சிறு தடி ஒன்று மட்டுமே ஆங்காங்கே இருக்கின்றது. இது வாகான சாரதிகளுக்கு சற்றும் விளங்காத அறிவிப்பு ஆகும்.
இன்று (20.09.2017) அதிகாலை இவ் வீதியால் பாண் ஏற்றிவந்த முச்சக்கர வண்டி கட்டுமான வேலைகளுக்காக வீதியில் போடப்பட்டிருந்த கல் ஒன்றில் தவறாக சிக்கி குடைசாய்ந்தது. அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார். முச்சக்கர வண்டியின் கண்ணாடிகள் சிதறியுள்ளது. வண்டியும் பாரிய தேசத்திற்குள்ளாகியுள்ளது. போருக்குப் பின்னர் வறுமையில் இருந்து மீள சாதாரணமாக உழைக்கும் இத் தொழிலாளி தொழில் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளார். ஆனால் அந்த சாதாரண மக்களுக்கு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தெரியவில்லை.
எம்மவர்களிடத்தில் ஓர் அபிப்பிராயம் உண்டு. தமிழ் மக்களுக்கு தேசிய ரீதியில்எ த்தனையே இடர்கள் இருக்கையில் இது பெரிய விடயமில்லை என. எனினும் மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எதுவும் மக்களின் உயிர்களை மதிக்காதவையாகவோ அவர்களின் பாதுகாப்பினைக் கண்டு கொள்ளாதவையாகவோ  அமையக்கூடாது. ஒப்பந்தகாரர்கள் அல்லது திணைக்களங்கள் அது பற்றி அவதானம் செலுத்த வேண்டும ;என்ற நன்நோக்கில் முறையிடுகின்றேன்.
தினமும் இவ் வீதியால் வலி கிழக்கு பிரதேச சபை செயலாளர் சென்று வருகின்றார். போக்குவரத்து பொலிசார் பயணிக்கின்றனர். கிராமசேவையாளர் உள்ளிட்டவர்கள் பயணிக்கின்றனர். வடக்கு மாகாண சபை உறுப்பினரின் வாகனம் சென்று வருகின்றது. அது போன்று வட மாகாண அதிகாரிகளினதும் வாகனங்களும் சென்று வருகின்றன. எனினும் யாரும் மக்களின் இந்தப் பிரச்சினையினை இதுவரையில் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் உடனடி கவனம் எடுத்து இது போன்று வேலைகள் நடைபெறும் சகல பகுதிகளிலும் வீதியொழுங்கிற்கு ஏற்ற சமிஞைகள் உரிய தராதரத்துடன் காட்சிப்படுத்தப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
எனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தாங்கள் என்ற வகையில் தயவு செய்து எதிர்வரும் காலங்களில் உரிய நியமங்களுடன் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து மக்களின் உயிர்களைக் காக்குமாறு தங்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
இவ்வாண்ணம்
உண்மையுள்ள
தியாகராஜா நிரோஸ்
0776569959
பிரதிகள்
வலி கிழக்கு பிரதேச சபை
வட மாகாண சபை உறுப்பினர்கள்
சிவில் சமூக பிரதிநிதிகள்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *