இலங்கை பிரதான செய்திகள்

வரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்வு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

வரட்சி காரணமாக இலங்கையில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கைகள் உயர்வடைந்துள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு இறுதி முதல் இலங்கையில் வரட்சியான காலநிலை நிலவி வருவதனால் பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகவும் வரட்சியான காலநிலை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. வரட்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் 17 மாவட்டங்களில் வரட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளில் பருவப்பெயர்ச்சி மழை பெய்தாலும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள போதியளவு நீர் வசதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *