இலங்கை பிரதான செய்திகள்

லலித் மற்றும் அனுசவுக்கு பிணை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு இன்றையதினம் நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,  பணை வழங்கப்பட்டுள்ள்.

600 மில்லியன் ரூபா பெறுமதியான சில் ஆடைகளை சட்டவிரோதமான முறையில் அரச பணத்தைக் கொண்டு விநியோகம் செய்ததாக இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவருக்கும் மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில  இருவரும் பிணை வழங்குமாறு கோரி கொழும்பு உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *