உலகம் பிரதான செய்திகள்

லண்டன் புகையிரத நிலைய குண்டுவெடிப்பு தொடர்பில் மேலும் மூவர் கைது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

லண்டன் பார்சன் கிறீன்  புகையிரத நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
புதன் கிழமை 48 மற்றும்30 வயது நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் செவ்வாய்கிழமை ஓருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இது மிகவேகமாக முன்னெடுக்கப்படும் விசாரணையாக காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளனர். ஐவரை கைதுசெய்துள்ளோம எனவும்  நான்கு இடங்களில் சோதனைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  இந்த தாக்குல் குறித்த முழுமையான தகவல்களை பெறும் முயற்சியில் புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *