இலங்கை பிரதான செய்திகள்

மாகாணசபைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது – பிரதமர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் மார்ச் மாதம் நடத்தப்படும எனவும்  இது குறித்து எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போதிலும் தேர்தல்களை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித அவசியமும் கிடையாது என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *