இலங்கை பிரதான செய்திகள்

தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டிகளில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள். வெற்றிவாகை சூடியுள்ளன:-

தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வடக்கு, கிழக்கு மாகாண அணிகள்  வெற்றிவாகை சூடியுள்ளன.
தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் கொழும்பு மீபேயிலுள்ள  அபிவிருத்தி மூலவள நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதிமுதல் தொடர்ந்து இரு நாட்களாக இடம்பெற்றது.
இதில் கனிஷ்ட பிரிவு, சிரேஷ்ட பிரிவு-1 என்ற இரு பிரிவிலும் வட மாகாண அணிகள் முதலாம் இடத்தையும் கிழக்கு மாகாண அணிகள் இரண்டாம் இடத்தையும் தனதாக்கிக் கொண்டன.
இப்போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரதுஷா(முல். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), ப.ஹரினி(வவு.இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி) ஆகியோரும் தரம் 8 ஐ சேர்ந்த கே.கிருசாந்(யாழ். இந்துக் கல்லூரி), கு.தாரங்கா(யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), ஜே.விஷ்ணவி(யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோருமே  மேற்படி போட்டியில் பங்கெடுத்து வெற்றியீட்டி கொடுத்துள்ளனர்.
சிரேஷ்ட பிரிவு-1 ஐ பிரதிநிதித்துவப்படுத்தி  தரம் 9 ஐ சேர்ந்த கு.கம்சாயினி (யா/அருணோதயா கல்லூரி), வி.விதுவர்சன் (வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்), க.சாம்பவி  (யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரும் தரம் 10 மாணவர்களான ந.சிவமைந்தன்( யாழ்.இந்துக் கல்லூரி), ர. றஜிந்தன்( யா/ஹாட்லிக் கல்லூரி), ச.வருணன்  (கிளிநொச்சி மகா வித்தியாலயம்), பா.ஆபிரகாம் ( யாழ்.இந்துக் கல்லூரி ஆகியோருமே  மேற்படி போட்டியில் பங்கெடுத்து வெற்றியீட்டி கொடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கனிஷ்டபிரிவில் தரம் 6 ஐ சேர்ந்த கோ.தர்சனா(தி/சண்முகா இந்துக்கல்லூரி), ஜே.பாகவன்( தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி), சு.சந்தியா (தி/ ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த நி.சயனுதன் (தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி), றுகேசன் (மட்டு.புனித மைக்கேல் கல்லூரி), அன்பாஸ்  (மட்டு.கட்ரங்குட் கல்லூரி) ஆகியோரும் தரம் 8ஐ சேர்ந்த ஜோசியா( தி/புனித ஜோசவ்ப் கல்லூரி), கரனீ(தி/சென் மேரிஸ் மகளிர் கல்லூரி), சு.கர்சியன்( தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரிவு -1ஐ பிரதிஇதித்துவப்படுத்தி தரம் 9 ஐ சேர்ந்த பா.ராகுல் ( தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி) இமயவன் (மட்டு. புனித மைக்கேல் கல்லூரி), உ.ரேகா (தி/ சண்முகா இந்துக் கல்லூரி), சசாங்கன் ( மட்டு. புனித மைக்கேல் கல்லூரி) ஆகியோரும் தரம் 10 ஐ சேர்ந்த அ.ஆகாஷ் ( தி/ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி), த.அஸ்வினி ( தி/சண்முகா இந்துக் கல்லூரி), பா.காவியா ( தி/சண்முகா இந்துக் கல்லூரி),ஓற்சூரன்( (மட்டு. புனித மைக்கேல் கல்லூரி) ஆகியோரும் போட்டியில் கலந்துகொண்டனர்.
இப்போட்டிகளில் கனிஷ்ட பிரிவில்  ஊவா மாகாணம் மூன்றாம் இடத்தையும் சிரேஷ்ட பிரிவு -1 இல் சப்பிரகமுவா மாகாணமம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *