இந்தியா பிரதான செய்திகள்

ஜார்கண்ட் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து – 8 பேர் பலி:-

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில்   தனியார் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில்  இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.    தொழிற்சாலையில்  வெடிமருத்து சேமிப்பு கிடங்கு பகுதியில் திடீரென  பற்றிய தீயானது    மற்ற பகுதிகளுக்கும்  பரவியது. இதயைடுத்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஏனினும் இந்த விபத்தில் சிக்கி  தொழிற்சாலையில்  இருந்த 8 பேர்  உயிரிழந்ததாகவும் மேலும்  25 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள்  வெளியாகியுள்ளன.

தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, இடிபாடுகள் அகற்றப்பட்டால் மட்டுமே பலி எண்ணிக்கை மற்றும் சேத விபரங்கள் துல்லியமாக தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பொலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *