இலங்கை பிரதான செய்திகள்

வன்னேரிக்குளம் கிராம பிரதேசம் உவரடைவதை தடுக்க குளங்களை ஆழமாக்குங்கள் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்தினையும்  அதனை அண்டி பிரதேசங்களும்  உவரடைவதைத் தடுப்பதற்கு அங்குள்ள  குளங்களை ஆழமாக்கி கூடுதல் நீரை சேமிப்பதன் மூலம் உவர்ப் பரம்பலைத் தடுக்கலாம் என கிராம மக்களினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குஞ்சுக்குளம், வன்னேரிக்குளம், திக்காய்குளம், மன்னியாகுளம் என்பவற்றை ஆழமாக்கி கூடுதலான நீரை சேமிப்பதன் மூலம் உவர் ஆபத்தில் இருந்து வன்னேரிக்குளம் கிராமத்தினையும்   அதனை அண்டி பிரதேசங்களும்   காத்திட முடியும்.

பூநகரி மண்டைக்கல்லாறு வழியாக வன்னேரிக்குளம் கிராமத்திற்கு உவர்ப் பரம்பல் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக இப்பிரதேசங்களில்   வாழ்கின்றஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன.

இப்பிரதேசத்தின்  வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வரும் நிலையில் மேற்படி குளங்களை ஆழமாக்கி புனரமைப்பதன் மூலம் வன்னேரிக்குளம்  உட்பட  அயல்  உவர் ஆபத்தில் இருந்து காக்க முடியும் என கிராம மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *