இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் திலீபனின் நினைவேந்தல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.  கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இடம்பெறும் மண்டபத்தில் குறிதத் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதன்போது விளக்கேற்றப்பட்டு மா வணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நினைவுவுரையும் இடம்பெற்றது,

திலீபன் அகிம்சையாக போராடியிருந்தார். அதே போன்று நாமும் எமது பிள்ளைகளை மீட்டு தருமாறு கோரி அகிம்சை வழியில் போராடி வருகின்றோம் என இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *