உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியா வெளியேறுவது சிறந்த விடயம் என எவரும் தெரிவிக்கப்போவதில்லை – டொனால்ட் டஸ்க்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா  வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில்  என ஐரோப்பிய பேரவையின் தலைவர்   தெரிவித்துள்ளார். பிரித்தானியா  பிரதமருடனான பேச்சுவார்த்தைகளின் பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா  பிரதமர் இத்தாலியில் ஆற்றிய உரை மற்றும் அவருடன் இன்று மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்பட்ட ஆக்கபூர்வமான ஆனால் யதார்த்தபூர்வமான  தொனி காரணமாக தான் எச்சரிக்கையுடனான நம்பிக்கையை வெளிப்படுத்த விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா    வெளியேறுவது சிறந்த விடயம் என எவரும் தெரிவிக்கப்போவதில்லை எனவும் இதனையே தான் தெரிவித்து வந்துள்ளேன்  எனவும் தெரிவித்த அவர் தற்போது நாங்கள் பாதிப்புகளை தவிர்க்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் என   தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *