இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக புழுக்கள் நிறைந்த கழிவு நீர் குழி -நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக கனகபுரம்  வீதியில் உள்ள சிறிய தேனீர் கடை ஒன்றின் கழிவு நீர் செல்லும் திறந்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சுகாதார பரிசோதகர்களின் கவனத்திற்கு வியாபாரிகளினால்   கொண்டு செல்லப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேனீர் கடையில் இருந்து வெளியேறுகின்ற அனைத்து கழிவு நீரும் திறந்த குழியில்  விடப்படுகிறது. இதனால் குறித்த குழியில் புழுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது  சுற்றயல் பிரதேசங்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக  விளங்குகிறது. எனத் தெரிவிக்கும் வியாபாரிகள்

சாதாரணமாக  கழிவு நீரை  முறையாக அகற்றாத மற்றும்  ஏனைய கழிவுகளை முறையாக அகற்றாத பல வா்த்தகள் மீது வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுத்து அதிகாரிகள்  ஏன் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *