இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்..

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக ஆளுனராக இருந்த ரோசையாவின் பதவி காலம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் மராட்டிய ஆளுனராக பணியாற்றும் வித்யாசாகர்ராவ் தமிழகத்துக்கும் பொறுப்பு ஆளுனராக பதவி வகித்து வந்தார்.    தமிழகத்துக்கு தனி ஆளுனர் நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வந்த நிலையில், மேகாலயா ஆளுநராக பணியாற்றிய  பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு நியமிக்கப்பட்டு உள்ளார். இதேவேளை தமிழகத்துடன் அசாம், பிஹார், அந்தமான், அருணாச்சலப்பிரதேச மாநிலங்களுக்கும் ஆளுநர்கள்  நியமிக்கட்டுள்ளனர்.

பீகார் மாநில கவர்னராக சத்ய படேல், அருணாச்சல பிரதேச மாநில கவர்னராக பி.டி.மிஸ்ரா, அசாம் மாநில கவர்னராக ஜக்தீஸ் முஹி மற்றும் மேகாலயா மாநிலத்திற்கு கங்கா பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநராக தேவேந்திர குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *