இலங்கை பிரதான செய்திகள்

பாடசாலை சமூகத்தின் ஆட்சேபனை காரணமாகவே வைரவிழா பிற்போடப்பட்டது :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின்   பாடசாலை சமூகத்தின்  ஒரு பகுதியினரின் ஆட்சேபனை காரணமாக ,  மாகாண கல்வி அமைச்சின் பணிப்புக்கமைய  வைர விழாவை  ஒத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பட்டுள்ளது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாலளர் இராசு இவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம்  பாடசாலையின் வைர விழா ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில்  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே  அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்

எதிர்வரும் இரண்டாம் திகதி  கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழாவை நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்  கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் விழாவினை பிறிதொரு தினத்தில் ஒத்தி வைக்குமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு ஊடாக கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இதேவளை  நேற்றையதினம்(29)  மாகாண கல்வி  ஆலோசனைக் கூட்டத்திலும்  கல்வி அமைச்சரால்  குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட போது   கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர்களும்  வைர விழாவை பிரிதொரு திகதியில் நடத்துவதற்கே ஆலோசனை வழங்கியதாகவும்  அதனபடியே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *