இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா இடை நிறுத்தம் தொடர்பான வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஊடக அறிக்கை.

கிளிநொச்சி இராமநாதபுரம் வைரவிழாக் கொண்டாட்டங்கள் தொடர்பானது
கிளிநொச்சி இராமநாதபுர மகா வித்தியாலயத்தில் 02.10.2017 அன்று கொண்டாடப்படவுள்ள வரைவிழா நிகழ்வு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டமை தொடர்பாக வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் ஊடகப் பிரிவி அறிக்கை

1. மேற்படி வைரவிழா நிகழ்வுகள் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சினதோ அல்லது முதல்வரினதோ பிரசன்னமின்றி பாடசாலையின் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டமை தொடர்பாக மேற்படி பாடசாலைச் சமுகம்,பழைய மாணவர்கள் மற்றும் பொது மக்களின் முறைப்பாடுகளை அடுத்து இம்முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பின்னர்,கல்வி அமைச்சின் அனுசரணையுடன், நடைபெற வேண்டுமென்பதால், இந் நிகழ்வை இடை நிறுத்துமாறு செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.

2. இவ்வைர விழாக் கொண்டாட்டங்கள் பாடசாலைச் சமுகத்திற்கு விருப்பமில்லாத வகையில் நடைபெறுவதாகவும்,ஒரு சிலஅரசியல்வாதிகளின்; தனிப்பட்ட குறுகிய அரசியல் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் சில அழுத்தங்களைக் கொடுத்து,தமக்கு விருப்பமில்லாத விருந்தினர்களை அழைக்க வைத்ததுடன்; கல்வி அமைச்சின் கீழ் நடைபெறுகின்ற இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சரையோ அல்லது முதலமைச்சரையோ அழைக்காது, இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டதை தாம் விரும்பவில்லை எனவும் பாடாலைச் சமுகத்தினர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

3. அவர்களது முறைப்பாடுகளில்; கிளிநொச்சி மாவட்ட்ததைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி பாடசாலை அதிபர் மற்றும் சமுக்ததினரிடம் இவ்விழாவுக்குத்தன்னைப் பிரதம விருந்தினராக அழைக்க வேண்டுமெனவும் வைர விழா கொண்;டாட்டங்களுக்கான செலவை ஈடு செய்யும் வகையில் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கு வதாகவும்,மேலும் மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக 50 மில்லியன் ரூபாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டு இந்த விழாவுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் வடக்கு மகாண கல்வி அமைச்சரையோ அல்லது முதலமைச்சரையோ அழைக்கக்கூடாது என்றும் நிபந்தனை போட்டுள்ளதுடன் கிளிநொச்சிப் பிரதேசத்திற்குத் தானே எல்லாவகையிலும் பொறுப்பாக இருப்பதால், வெளியார் எவரையும் அழைக்கக் கூடாது என்றும் கடுமையாகத் தெரிவித்;துள்ளார் என்று எமக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பழைய மாணவர்களோ அல்லது அபிவிருத்திச் சங்கமோ குறிப்பிட்ட அரசியல்வாதியை பிரதம விருந்தினராக அழைக்க விரும்பவில்லை என்பதை, அதிபர் குறித்த அரசியல்வாதியிடம் தெரிவி;தத பின்பே, இந்த நிதி அன்பளிப்புக்களைக் காட்டித் தன்னை பிரதம விருந்தினராகப் போட வைத்துள்ளார். .பாடசாலை அபிவிருத்திக் குழு விரும்பவில்லை என்பதைத் தெரிந்து,அவர்களையும் அழைத்து, நெருக்கடிகளைக் கொடுத்தே ஏற்றுக் கொள்ள வைத்தார் என்பதை சம்பந்தப் பட்டவர்களே எமக்குத் தெரிவி;த்துள்ளனர்.

இத்தகைய ஒரு சூழலில் பாடசாலையையும், பாடசாலை நிகழ்வுகளையும் அரசியல் களமாக்குவதை ஏற்றுக் கொள்வது தவறான முன்னுதாரணமாகும்.  பாடசாலையின் நிர்வாகத்தைக் குழப்பும் வகையில் அரசியல் வாதிகளோ அல்லது வெளியார் எவருமோ பாடசாலை விடயங்களில் தலையிடுவதை கல்வி அமைச்சு அனுமதிக்க முடியாது.

4. பாடசாலை நிர்வாகம் என்பது பிள்ளைகள் ஆசிரியர்கள் பெறறோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் கல்வி அபிவிருத்தியையும்,நல்லொழுக்கத்தையும் பேணிவருகின்ற ஒரு புனிதமான நிறுவனம் என்ற வகையில் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள் மற்றும் அடாவடித் தனங்களினால் பாடசாலையின் இயல்பு நிலை குழம்பக் கூடாது என்ற  வகையில் பொது மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையிலேயே இம் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *