இலங்கை பிரதான செய்திகள்

எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியம்?

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் எரிபொருளுக்கான விலைகள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார். லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்த தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருட்களுக்கான விலைகளை உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனம் விலைகளை உயர்த்தினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை அதிகரிக்கும் எனவும், இதன் கேள்விக்கு ஏற்ப நிரம்பல் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலைகளை உயர்த்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையில் பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *