உலகம் பிரதான செய்திகள்

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூன்று அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

உயிரினங்களில் வாழ்முறைக்கு உதவிடும் மரபணு பற்றிய கண்டுபிடிப்புக்காக மருத்துவ துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.   அந்தவகையில், 2017-ம் ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு பெறுபவர்கள் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று வெளியான அறிவிப்பில் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு ஜெப்ரி சி.ஹால்( effrey C Hall) , மைக்கேல் ரோஸ்பாஷ் (Michael Rosbash ) மற்றும் மைக்கேல் டபிள்யூ. யங் ( Michael W Young ) ஆகிய மூன்று  அமெரிக்கர்களுக்கு   பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் பரிணாம வளர்ச்சிக்கேற்பவும், பருவநிலை மற்றும் வெப்பத்தால் உண்டாகும் சக்தி இழப்பை ஈடு செய்யவும் மனிதர்கள், விலங்கினம், தாவரங்கள் உள்பட அனைத்து உயிரினங்களும்  இரவு நேரங்களில் விழித்திருந்து வேலை செய்வதற்கு  தேவையான புரதச்சத்தை ஈட்டித்தரும் மரபணு பற்றிய ஆய்வை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இவர்களுக்கு இந்த விருது   வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *