இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் கைதிகளுக்கு தீர்வில்லையேல் தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தொடர்ந்து ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழில். உள்ள தமிழரசு கட்சி அலுவலகம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் , பொது அமைப்புக்கள் , சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தை அடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்க கோரி மகஜர் ஒன்று தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் எஸ்.குலநாயகத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
அதேவேளை எதிர்வரும் வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் கைதிகள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லையெனில் தமிழரசு கட்சி அலுவலகத்தை முடக்கி தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *