இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகளின் தடகள போட்டிகள்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக சமூக சேவைகள் அமைச்சும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய தடகளப்போட்டி இன்றையதினம் 3.10.2017 அன்று கிளிநொச்சி மத்தியகல்லூரியில் நடைபெற்றது.

இத்தடகளப்போட்டியில் கரைச்சி.கண்டாவளை.பச்சிலைப்பள்ளி. பூநகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றினர்.

நீளம்பாய்தல்.உயரம்பாய்தல். தட்டெறிதல்.குண்டெறிதல்.குறுந்தூர ஒட்டம் போன்ற தடகளபோட்டிகள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ம.மோகனதாஸ் அவர்களது தலைமையிலும் மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் ச.மயுரி அவர்களது ஏற்பாட்டிலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சி.சத்தியசீலன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர்  த.பிருந்தாகரன் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *