இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் மக்களுடன் நெருக்கமாவதற்காக பசில் ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளார் :


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அரசியல் ரீதியான கருத்தை முன்வைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ஸ அண்மையில் வடக்கில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அண்iமையில் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நெருக்கமாகும் நோக்கில் பசில் ராஜபக்ஸ ஒட்டுமொத்த படையினரையும் காட்டிக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மக்கள் ராஜபக்ஸக்களை வெறுப்புடன் நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீது தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்கும், பசில் ராஜபக்ஸ படையினர் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *