இந்தியா பிரதான செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக வீழ்ச்சி அடையும்: RBI கணிப்பு:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதேபோல் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பாரத ரிசர்வ் வங்கி நேற்று கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை அறிவித்தது. இவ்வங்கி குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. Repo rate எந்த மாற்றமும் இன்றி 6 சதவீதமாக நீடிக்கிறது. reverse Repo rateடும் மாறாமல் 5.75 சதவீதமாக உள்ளது.

உர்ஜித் பட்டேல் புதிய கவர்னராக பொறுப்பேற்ற பின் ஏழாவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது.

பாரத ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தனது கொள்கை முடிவுகளை அறிவித்த போது Repo rateட்டை எந்த மாற்றமும் இன்றி 6.25 சதவீதமாக நிர்ணயித்தது. ஆனால் reverse Repo rateட்டை 0.25 சதவீதம் அதிகரித்து 6 சதவீதமாக்கியது. ஜூன் 7-ந் தேதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்த விகிதங்கள் மாற்றப்படவில்லை. எனவே Repo rate 6.25 சதவீதமாகவும், reverse Repo rate 6 சதவீதமாகவும் நீடித்தது.

ஒகஸ்டு 2-ந் தேதி அன்று இந்த வட்டி விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டன. எனவே ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் முறையே 6 சதவீதம் மற்றும் 5.75 சதவீதமாக குறைந்தது. நேற்று தனது கொள்கை முடிவுகளை அறிவித்த ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யவில்லை. எனவே Repo rate 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 5.75 சதவீதமாகவும் நீடிக்கிறது.

மற்ற முக்கிய பொருளாதார குறியீடுகள் பற்றிய மதிப்பீடுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது. முந்தைய ஆய்வுக்கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டிற்கான (2017-18) பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டில் மாற்றம் செய்யாமல் 7.3 சதவீதமாகவே இவ்வங்கி வைத்தது. இப்போது இது 6.7 சதவீதம் முதல் 7.3 சதவீதம் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனை விலை பணவீக்கத்தை நீண்ட கால அடிப்படையில் 4 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் (ஒக்டோபர்-மார்ச்) இது 4.2 சதவீதம் முதல் 4.6 சதவீதம் வரை இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.

அரசுக்கடன்பத்திரங்களில் வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய முதலீட்டு விகிதத்தை (எஸ்.எல்.ஆர்) ரிசர்வ் வங்கி 0.5 சதவீதம் குறைத்து 19.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரூ.57,000 கோடி மிச்சமாகி, இந்த நிதியை கடன் வழங்க பயன்படுத்த முடியும். பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி போன்றவற்றால் நிதிப்பற்றாக்குறை 1 சதவீதம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை முன்பு 45 தினங்களுக்கு ஒரு முறை வெளியிடப்பட்டது. தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆய்வுக்கூட்டம் டிசம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *