இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு திருப்பெருந்துறை குப்பை வழக்கு, எதிர்வரும் 16ஆம் திகதி:-

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் குப்பை கொட்டப்படுவது தொடர்பான வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், அரசாங்க அதிபர் ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி எம்.ஐ. இர்ஷதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த மனு தொடர்பான விசாரணைகள் நேற்றையதினம் இடம்பெற்ற போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

எதிர் தரப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதுடன் குறித்த மனு தொடர்பான விசாரணைகள் குறித்து சட்டமா அதிபர், அரசாங்க அதிபர் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக வழக்கினை ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *