உலகம் பிரதான செய்திகள்

ஸ்கொட்லாந்தில் வெடிப்பு சம்பவம் – இருவர் காயம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்ற சிறிய வெடிப்புச்சம்பவமொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். கிளாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள விசாவில் உள்ள கட்டிடமொன்றி;ல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அருகில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவசரசேவை பிரிவினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் காயமடைந்த இருவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்து சம்பவத்திற்கு பின்னர் தீமூண்டுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *