இந்தியா பிரதான செய்திகள்

குறுகிய கால அவகாசத்தில் போரிட இந்திய விமானப்படை தயாராக உள்ளது – பி.எஸ். தனோவா


குறுகிய கால அவகாசத்தில் போரிட இந்திய விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப் படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார். விமானப்படை தினத்தை முன்னிட்டு டெல்லியி்ல் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய போதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்

நாட்டின் பாதுகாப்புக்கு எத்தகைய சவால் வந்தாலும் அதை சமாளிக்க விமானப்படை முழு திறனோடு உள்ளது எனவும் பதான்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, விமானப்படை தளங்களில் எந்த விதமான அச்சுறுத்தலையும் எதிர்த்து தாக்குதல் நடத்தக்கூடிய வகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

குறுகிய கால அவகாசத்தில் போரிடக் கூடிய அளவுக்கு விமானப்படை தயாராக உள்ளது எனவும் 3 பெண் விமானிகள் கடந்த ஆண்டு   ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் எனவும்  அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *