இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சர்க்கரை தொழிற்சாலையில் இருந்து வேதிவாயு கசிந்ததால் 300 மாணவர்கள் பாதிப்பு


இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்    சர்க்கரை  தொழிற்சாலையில் இருந்து வேதிவாயு கசிந்ததால் அருகிலுள்ள பாடசாலையில் இருந்த    சுமார் 300 மாணவ, மாணவியர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை  சக்கரை தொழிற்சபலையில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த கழிவு நீரிலிருந்து வெளிப்பட்ட வாயுவினாலேயே மாணவர்கள் பாதிக்கப்பட்;டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் குறித்த தொழிற்சாலையின் முன் மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *