உலகம் பிரதான செய்திகள்

இத்தாலியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நலநடுக்கங்கள்

italt

மத்திய இத்தாலியில் இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த இரண்டு நலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.  5.4 மற்றும் 6 என்ற  ரிக்ரர் அளவில் பெருகியா என்ற நகருக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக  சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதனால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலர் காயமடைந்திருப்பதாகக் தெரிவிக்கப்படும் நிலையில் இன்று பகல் வேளையில்தான் பாதிப்பின் முழுமையான விபரங்கள் வெளிவரலாம் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  இரண்டாவது நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னதாக  பலர் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த ஓகஸ்ட் மாதம் இத்தாலியில் ஏற்பட்ட நலநடுக்கம்  காரணமாக  முந்நூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

italy-3 italy2

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *