இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில்; வீடொன்றிற்கு அருகில் சிறிய கொட்டில் அமைப்பதற்கு குழிதோண்டிய போது உரப்பை ஒன்றில கட்டப்பட்ட நிலையில் ஐம்பது மிதிவெடிகளும் அவற்றிற்கான வெடிப்பிகளும் மீட்கப்பட்டுள்ளன.

மக்கள் மீள்குடியேற்றம் செய்;யப்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்குப்பகுதியில் உள்ள குடும்பமொன்று அவரது காணிக்குள் நிரந்தரவீடொன்றினை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பருவமழை பெய்துவருவதனால் இன்று (07-11-2017)  வீட்டின் அருகில் கொட்டில் ஒன்றைப்;போடுவதற்கு கிடங்;கு கிண்டியபோது, வெடிபொருட்கள் வெளிவந்தததையடுத்து, கிராமஅலுவலர் மற்றும்  காவல்துறையினருக்கு  தகவல் வழங்கப்பட்து.

இதனையடுத்து அங்கு விரைந்த விசேட அதிரப்படையினர் குறித்த பகுதியில் இருந்து மண்ணிற்குள் புதைக்கப்பட்டநிலையில் ஐம்பது வரையான மிதிவெடிகளையும் அதற்குப்பயன்படுத்தும் வெடிப்பிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *