உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட வீரர்கள் சீனாவில் கைது

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட வீரர்கள் சிலர் சீனாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லொஸ் ஏஞ்சல்ஸ் (The University of California, Los Angeles   )கூடைப்பந்தாட்ட வீரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் சீனாவிற்கு பயணம் செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடையொன்றில் பொருட்களை களவாடியதாக தெரிவித்து  கூடைபந்தாட்ட அணியின் மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

LiAngelo Ball, Cody Riley    மற்றும் Jalen Hill ஆகிய வீரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கூடைப்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்க பல்கலைக்கழக வீரர்கள் சீனாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக சீன காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *