உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

பிரபல கார்ப்பந்தய வீரர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரபல கார்ப்பந்தய வீரர்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. பிரேஸில் நடைபெறும் க்றோன்ப்ரீ கார்பந்தய போட்டிகளில் பங்கேற்கும் கார்பந்தய வீரர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபல கார் பந்தய வீரர் லூயிஸ் ஹமில்டனின் அணி வீரர்களிடமே இவ்வாறு  துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டு  கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போர்மியூலா வன் போட்டி ஏற்பட்டாளர்கள் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஹமில்டன் கோரியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இது குறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *