உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – ஈரான் ஈராக் எல்லைப் பகுதி நில அதிர்வில் உயிரிழந்தோர் 348 ஆக அதிகரிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈரான் மற்றும் ஈராக்கிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 348ஆக  அதிகரித்துள்ளது.  ஈரானின் குர்திஸ்தான் பிராந்தியத்தில்  ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 7.3 ரிச்டர் அளவில்   பதிவாகியிருந்தது.

கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாலும் மருத்துவமனையில் பலர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும்  உயிரிழநதோரின் எண்ணிக்கை மேலும்  அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஈரான் ஈராக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் 135பேர் பலி

Nov 13, 2017 @ 03:02

ஈரான் மற்றும் ஈராக்கிய எல்லைப் பகுதியில் இடம்பெற்ற பாரிய நில அதிர்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 7.3 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் அதிகளவான உயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொலைதொடர்பு வசதிகளும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *