இலங்கை பிரதான செய்திகள்

இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கான பொது மன்னிப்புக் காலம் நீடிப்பு


குளோபல் தமிழ் செய்தியாளர்

இராணுவத்திலிருந்து தப்பியோடியோருக்கான பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை விட்டு தப்பியோடியவர்கள், அறிவிக்காமல் சேவையை விட்டு விலகியவர்கள், உரிய முறையில் விடுமுறை பெற்றுக்கொள்ளாது சேவைக்கு திரும்பாதவர்கள் உள்ளிட்டோருக்கு இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் 23ம் திகதி தொடக்கம் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் உள்ளது. இந்தக் காலப் பகுதியில் 10 அதிகாரிகள், 8 கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட முப்படையைச் சேர்ந்த 8052 பேர், தத்தமது படையணிகளில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வெறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு அமைய பொது மன்னிப்புக் காலம் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *