இலங்கை பிரதான செய்திகள்

புகைப்படம் எடுக்க தடை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழ்.பல்கலை கழக மாணவர்கள் மகஜர் கையளிப்பதை ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்திருந்தனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யுமாறு கோரி யாழ்.பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு பேரணி நடத்தப்பட்டது.

அதன் போது மகஜர் கையளிக்கும் முகமாக முதலில் யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு மாணவர்கள் பேரணியாக சென்று இருந்தனர். அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்கள் மூன்று மாணவ பிரதிநிகளை மாத்திரம் தமது அலுவலக வளாகத்தினுள் அழைத்து மகஜரை பெற்றுக்கொண்டனர். அதன் போது ஊடகவியலாளர்கள் வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கபப்டவில்லை.

வழமையாக ஐ.நா அலுவலகத்திற்கு மகஜர் அளிக்க செல்லும் போது அவற்றினை அலுவலக பிரதான வாயினில் வைத்து பெற்றுக்கொண்டு மகஜர் கையளித்தவர்களை அனுப்பி வைப்பார்கள். அதனை ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிப்பார்கள்.

அதேபோன்று வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு மகஜர் கையளிக்க மாணவர்கள் சென்ற போதும் மூன்று மாணவர்கள் மாத்திரமே அலுவலகத்தினுள் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஊடகவியலாளர்கள் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேவேளை நேற்றைய தினம் வடமாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு வழமையினை விட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *