உலகம் பிரதான செய்திகள்

அவுஸ்ரேலியாவில் இந்திய வாகன ஓட்டுனர் உயிரோடு எரிப்பு

aus

அவுஸ்ரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பேரூந்தில் ; ஓட்டுனராக பணியாற்றிய 29 வயதுடைய, மன்மீத் அலிசீர் என்ற இந்தியரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார்.

நேற்று பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பேரூந்தை ஓட்டிச்சென்ற வேளை அதில் பல பயணிகள் பயணம் செய்த வேளை பிரிஸ்பேன் நகரில் வைத்து ஒருவர் மன்மீத் அலிசீரை குறிவைத்து, தீப்பிடித்து எரியும் தன்மை கொண்ட திரவத்தை திடீரென வீசியுள்ளார். இதில் பேரூந்தின் முன்பாகம் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் தீயில் சிக்கி, மன்மீத் அலிசீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள், பின்புற வாசல் வழியாக அவசரஅவசரமாக இறங்கி உயிர் தப்பித்துள்ள போதும் கரும்புகையில் மூச்சு திணறி, 6 பேர் பாதிப்புக்குள்ளானதாகவும் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 48 வயதான குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு ள்ளார்.

பலியான மன்மீத் அலிசீர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்த நகரில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என மேயர் கிரஹாம் குயிர்க் அறிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply