இந்தியா பிரதான செய்திகள்

இந்திய இராணுவ ரகசியங்களை அளிக்கும் உளவாளிகளை ஐஎஸ்ஐ எப்படி அணுகுகிறது?

isi

 பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு இந்திய இராணுவத் தகவல்களை அளித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களுக்கு ஐஎஸ்ஐ என்ன சன்மானம் அளிக்கிறது என்ற தகவல்கள் விசாரணையில் வெளியாகியுள்ளன.

மாதத்துக்கு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 வரை தகவல்களின் பயனைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. நிறைய ஆவணங்கள் கைமாறுகின்றன. அதில் சில பயனுள்ளவையாக இருக்கும். பல பயனற்றவையாக இருக்கும் என்று காவல்துறை உயரதிகாரி இணை ஆணையர் ரவீந்திர ஜாதவ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தூதரக ஊழியர் மஹ்மூத் அக்தர், ஐஎஸ்ஐ உளவாளியாக செயற்பட்டவர். இவர் ராஜஸ்தானிலும், குஜாரத்திலும் இருக்கும் தங்களது கைக்கூலிகளிடம் பணத்துக்கு கஷ்டப்படும் நபர்களை உளவு வேலைகளுக்கு தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான மவுலானா ரம்ஜான் கான், ராஜஸ்தானின் நாக்பூர் மாவட்டத்தில் மசூதியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். மேலும் இவர் இஸ்லாமிய மதபோதகரும் கூட. இவருக்கு மசூதியைப் பார்த்துக் கொள்வதற்காக ரூ.2000-மும், ஆசிரியராக இருப்பதற்கு ரூ.3,000-மும் வழங்கப்படுகிறது என்கிறார் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர்.

ஓர் உளவாளியாக இவரைப் போன்றவர்களை குறிவைக்கக் காரணம், அப்பகுதிகளில் இவருக்கு இருக்கும் மரியாதை. இவரை ராணுவத்தின் பணியிலிருக்கும் பல அதிகாரிகளும் எல்லைப் பாதுகாப்புப் படை ஜவான்களும் சந்திக்கின்றனர்.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் இருப்பதால் அந்த இடத்தின் புவி அமைப்பை அவர் நன்றாக அறிந்து வைத்துள்ளார். இந்நிலையில்தான் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அக்தர் இவரை அணுகி பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கக் கோரியுள்ளார். இதற்கு நல்ல சன்மானம் அளிப்பதாகவும் ஆசை காட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மற்றொரு நபரான சுபாஷ் ஜங்கீரும் சுலபமாக பொறியில் சிக்கும் தன்மை கொண்டவர்தான். இவர் பல்பொருள் வாணிபம் ஒன்றை வைத்திருந்தார், அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இவரையும் ஓராண்டுக்கு முன்பாக ஐ.எஸ்.ஐ. அமர்த்தியுள்ளது.

ஜங்கீர் கடும் கடன் சுமையில் தத்தளித்தார். இவரது பண நெருக்கடியை வைத்து அவரையும் கான் உள்ளே இழுத்துள்ளார்.

இதனையடுத்து ராணுவ வீரர்கள் யாரேனும் இந்த வலையில் பணத்திற்காக விழ வாய்ப்புள்ளதையும் விசாரணையாளர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியதோடு, இன்னும் எவ்வளவு பேர் இந்தியாவின் இப்பகுதியில் பாகிஸ்தான் உளவு நிறுவனம ஐ.எஸ்.ஐ.க்கு தகவல் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறது இந்திய பொலிஸ் துறை.

ஷோயப் என்ற 3ஆவது நபரையும் ஜோத்பூரில் வியாழனன்று ராஜஸ்தான் பொலிஸ் கைது செய்தனர். இவரை விசாரித்தால் இன்னும் சில தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *