இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – பாதுகாப்பு தீவிரம்

devar_09226

ஆன்மீகவாதியும் சுதந்திரப் போராட்ட போராளியுமான முத்துராமலிங்க தேவரின் 54-வது குருபூஜை இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று நடைபெறுகின்றது.  பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் செயற்பட்டவர்.

இக்கட்சி நேதாஜி தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். தேவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.  இன்றைய தினம் தமிழக முக்கிய அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசர் உட்பட பல தலைவர்கள் வருகை தந்து வணக்க நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.  இதனால், தமிழக காவல்துறை தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. ஆளில்லா விமானங்களும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் உருவ சிலைக்கு ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ மாலையிட்டு வணக்கம் செலுத்தினார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply