இந்தியா பிரதான செய்திகள்

28 மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக்கொலை- 40 ஆண்டுகால புரட்சிகர போராட்டத்தில் பேரிழப்பு – மாவோயிஸ்ட் போராளிகள்

maoists_bodies_306_3062942f
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மால்காங்கிரியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 28 மாவோயிஸ்ட் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.   40 ஆண்டுகால புரட்சிகர போராட்டத்தில் ஏற்பட்ட பேரிழப்பு இது என்று மாவோயிஸ்ட் போராளிகள் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதலைக் கண்டித்து மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நவம்பர் 3ஆம் திகதி கதவடைப்பு போராட்டத்திற்கு மாவோயிஸ்ட் போராளிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரதாப் விடுத்த செய்திக் குறிப்பில், தமது போராளிகள் 11 பேரை காயமடைந்த நிலையில் கைதுசெய்த காவல்துறை அவர்களை சித்தரவதை செய்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.  சரணடைந்த மாவோயிஸ்ட் போராளிகளை வைத்து தலைவர்களை குறிவைக்க பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும் மிகவும் பழைய உத்தியாகும் இது என்றும் ஆனால் இவை இயக்கத்தை பலவீனப்படுத்தாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இத்தகைய தாக்குதல்கள் பலவற்றை கடந்து வந்துள்ள தமது புரட்சிகர இயக்கம் ஆயிரக்கணக்கானோரை இழந்திருப்பதாகவும் சுரண்டல்தான் ஆட்சியாளர்களுக்கும் புரட்சிகர வெகுஜனங்களுக்கும் இடையே போராட்ட குணத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையை ஆளும் வர்க்கம் மறந்து விடுவதாகவும் இதற்கான பெரிய விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என்றும்  மாவோயிஸ்ட் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரதாப் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பழங்குடியினர் பகுதிகளில் இந்திய அரசும் மாநில அரசுகளும் ஆவேச சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *