உலகம் பிரதான செய்திகள்

நைஜீரியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற 2 தற்கொலைத் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

nigeria
நைஜீரியாவின் வடகிழக்கு நகரமான மைதுகுரியில் நேற்றையதினம் 2 தற்கொலை தாக்குதல்கள்   மேற்கொள்ளப்பட்டுள்ளன.  முதலாவதாக காலை வேளையில் மைதுகுரி அருகேயுள்ள பகாசி ராணுவ முகாம் பகுதிக்கு மோட்டார் பொருந்திய வாகனத்தில் சென்ற ஒரு பெண் தீவிரவாதி ஒருவர்  தன் உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்ததில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனையடுத்து   ஒரு பெட்ரோல் நிலையம்; அருகே மோட்டார் பொருந்திய வாகனத்தில் சென்ற இன்னுமொரு பெண் தீவிரவாதி குண்டை வெடிக்க செய்ததில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்  17 பேர் காயம் அடைந்துள்ளனர்.  நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் போகோஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nigeria2

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *