பல்சுவை பிரதான செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இந்தியன் பிலிம் பெர்சினாலிட்டி விருது அறிவிப்பு

spb
பிரபல தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது வழங்கப்பட உள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.  இன்று புதுடில்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இந்தத் தகவலை அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. விரைவில் இடம்பெறவுள்ள 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் நெல்லூர் மாவட்டத்தில்(தற்போது ஆந்திரப் பிரதேசம்) பிறந்தவர்.   எஸ். பி. பி (S.P.B) என்ற முன்னெழுத்துகளால் பரவலாக அறியப்படும் இவர் ஜூன் 4, 1946இல் பிறந்தவர். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ.பி.பி உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *