இந்தியா பிரதான செய்திகள்

வங்கிப் போட்டிப் பரீட்சையிலும் வட இந்தியர்கள் ஆதிக்கம் – தமிழகத்தில் அதிருப்தி

sbi-bank_12351
பாரத ஸ்டேட் வங்கி என்ற இந்திய வங்கி நடத்தி கனிஸ்ட உதவியாலளர் பரீட்சையில் தமிழகத்தை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர் எனக் கொதிக்கின்றனர் பரீட்சை எழுதிய தமிழக விண்ணப்பதாரிகள்.தமிழ்நாட்டுப் பிரிவில் வட இந்தியர்களே அதிகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.  மத்திய அரசின் புறக்கணிப்பு டநவடிக்கைகளில் இதுவும் ஒன்றென அவர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எழுதுவினைஞர் மற்றும் அதிகாரி பணியிடங்களில் சேருவதற்கு ஐ.பி.பி.எஸ் நடத்தும் பரீட்சியைில் சித்தி பெற வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி மாத்திரம் போட்டிப் பரீட்சைகளை தானே நடத்துகிறது.
இந்த ஆண்டு எழுது வினைஞர் – கனிஷ்ட உதவியாளர் இடத்திற்கான  17,400 வெற்றிடங்களை நிரப்ப பாரத ஸ்டேட் வங்கி தீர்மானித்திருந்தது. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரலில் வெளியானது. இதில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 1,420 காலிப் வெற்றிடங்கள் ஒதுக்கப்பட்டன.இதில் தமிழகத்து விண்ணப்பதாரிகள் புறக்கணிக்கப்பட்டு, வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளத ாக அதிருப்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
sbi-notifications_12069

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *