இலங்கை பிரதான செய்திகள்

சபாநாயகரின் புதல்வி லண்டனில் காலமானார்

karu-daughterகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளைய புதல்வி சஞ்சீவனி இந்திரா ஜயசூரிய டிக்கர் லண்டனில் காலமானார். சஞ்சீவனி சென் பிரிட்ஜட் கொன்வன்ட், தேவி பாலிகா மற்றும் யோர்க்ஸ்யார் புல்நெக் பாடசாலை அகியனவற்றின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த் போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைசார் பட்டம் பெற்றுக்கொண்ட இவர், லண்டன் பொருளியல் கல்லூரியில் கலாநிதிப் பட்டம் வென்றவர். பிரித்தானியாவின் சில நிறுவனங்களில் முக்கிய பதவிகளை அவர் வகித்து வந்துள்ளார். இறக்கும் போது அன்னாருக்கு நாற்பது வயது எனவும், இறுதி விருப்பத்தின் அடிப்படையில் அன்னாரின் பூதவுடல் லண்டனிலேயே நல்லடக்கம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts