இந்தியா பிரதான செய்திகள்

.4,700 கோடி ரூபா மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: பிரபல பொலிவுட் தயாரிப்பாளர் கைது:-

drugs

இந்தியாவின் ராஜஸ்தானில் 4, ஆயிரத்து 700 கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பொலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள குடோன் ஒன்றில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுங்கம் மற்றும் கலால் வாரியத்தின் புலனாய்வு பிரிவான, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த மாதம் 29ம் திகதி அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 23 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள மான்ட்ராக்ஸ் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பில் மும்பையைச் சேர்ந்த பிரபல பொலிவுட் தயாரிப்பாளரான சுபாஷ் துதானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் முதல்முறையாக இவ்வளவு அதிக அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் கூட இவ்வளவு போதைப் பொருள் சிக்கியது இதுவே முதல் முறை எனத் தெரிவி;கலாம் என இது குறித்து வருவாய் புலனாய்வு இயக்குனரக தலைவர் ஜெயந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *