இலங்கை பிரதான செய்திகள்

பிணை முறி மோசடி குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி

maithri
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பிணை முறி மோசடி குறித்து தாம் எப்போதும் பேசியது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்க பிணை முறி விசாரணை அறிக்கை தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *