இலங்கை

மைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர்

ear
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் பாணியில், டுபாயில் வைத்து முன்னாள் காதலியின் காதை இலங்கையர் ஒருவர் கடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 34 வயதான இலங்கையர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி அல் சல்வா பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த குறித்த இலங்கையர் தம்மை பிடித்து கொண்டதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். நபரின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சி எடுத்த போது காதை கடித்ததாகத் தெரிவித்துள்ளார். மூன்றாண்டுகள் காதல் உறவு காணப்பட்டதாகவும் பின்னர் பிரிந்து சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காதின் ஒரு பகுதி துண்டாகுமாறு கடித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 21ம் திகதி மீளவும் நடைபெற உள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *