இலங்கை பிரதான செய்திகள்

வலிவடக்கில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட 454 ஏக்கர் நிலப்பரப்பை இன்றைய தினம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

vali-north

யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட 454 ஏக்கர் நிலப்பரப்பை இன்றைய தினம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்த 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக யாழ். அரச அதிபர் என். வேதநாயகனிடம் கையளித்திருந்தார்.

குறித்த காணிகளை  மக்கள் பார்வையிட படையினர் இன்றைய தினம் அனுமதி வழங்கியதனை அடுத்து  மக்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.  28 வருடங்களின் பின் தங்கள் சொந்த நிலத்தை பார்வையிட்டுள்ள  மக்கள் பெரும்பாலும்  தமது வீடுகள்; இடித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும்   காணிகளில் பாரிய குழிகள் உருவாகும் படி மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *