இலங்கை பிரதான செய்திகள்

யாழ். அரச அதிபர் தலைமையிலான குழுவினர் வலி வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டுள்ளனர்.

img_3315
குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்

இன்றைய தினம் யாழ். அரச அதிபர் என். வேதநாயகன் தலைமையிலான குழுவினர் வலி வடக்கு பகுதியில் ராணுவத்தினரால் மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டுள்ளனர்.  மேலும் அங்கு மீள்குடியேறவுள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ள அரச அதிபர் ராணுவத்தினர் வசமுள்ள மீதிக் காணிகளையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்த 454 ஏக்கர் நிலத்தை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக யாழ். அரச அதிபர் என். வேதநாயகனிடம் கையளித்திருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

img_3310img_3320

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *