பிரதான செய்திகள் விளையாட்டு

ரொனால்டோவின் ஒப்பந்த காலத்தை ரியல் மட்ரீட் நீடித்துள்ளது

ronaldo
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒப்பந்த காலத்தை ரியல் மட்ரீட் கழகம் நீடித்துள்ளது. எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் கழகத்துடன் இணைந்து இருப்பதாக ரொனால்டோ ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளார். 31 வயதான ரொனால்டோவின் ஒப்பந்த காலம் 2018ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் பூர்த்தியாகவுள்ள நிலையில்  இந்த ஒப்பந்த காலத்தை 2021ம் ஆண்டு வரையில் நீடிக்கத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோவின் வாராந்த வருமானம் சுமார் 3,65,000 ஸ்ரேலிங் பவுண்ட்கள் என தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் மான்செஸ்டர் யுனைடட் கழகத்திலிருந்து ரியல் மட்ரீட் கழகத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் ரொனால்டோ 371 கோல்களை போட்டுள்ளார். இரண்டு தடவைகள் ரியல் மட்ரீட் கழகம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்ல ரொனால்டோ முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *