உலகம் பிரதான செய்திகள்

புகழ்பெற்ற ஆப்கன் பெண்ணை நாடு கடத்தியது பாகிஸ்தான்

afghangirl_12086
நஷனல் ஜியோகிராபிக் இதழ் ஊடாக புகழ் பெற்ற ஆப்கன் அகதிப் பெண், ஷர்பத் குலாவை பாகிஸ்தான்,  நாடு கடத்தியுள்ளது.  பாகிஸ்தான் அகதிகள் முகாம்களில் 33 வருடங்களுக்கு முன்னர் கவலையான முகத்துடன் பச்சைநிறக் கண்களோடு காணப்பட்ட ஷர்பத் குலா  என்ற 12 வயதுச் சிறுமியை அமெரிக்கா புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்தார்.

அந்த புகைப்படம் 1985-ம் ஆண்டு, நஷனல் ஜியாகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்து ‘ஆப்கன் பெண்’ என்று உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.45 வயதான ஷர்பத் மீது பாகிஸ்தான், போலியான அடையாள அட்டையைப் பெற்று பாகிஸ்தானில் தங்கியுள்ளதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்தக் குற்றத்துக்காக ஷர்பத் குலாம், அவரது தாய் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று ஷர்பத் தனது நான்கு குழந்தைகளுடன், ஆஃப்கான் தூதரக அதிகாரிகள் உதவியோடு ஆஃப்கானுக்கு நாடு கடத்தப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  மேலும் அவர் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததாகவும் அவர் விருப்பத்துடன்தான் ஆஃப்கானுக்கு அழைத்து செல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *