இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் சிறப்பு பொலிஸ் உத்தியோகத்தராக தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி தெரிவு

kilinochchi-police-1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கிளிநொச்சிப்  பொலிசாரின்  கடமைக்கான  ஊக்குவிப்புப் பரிசு வழங்கும்  நிகழ்வு இன்று  கிளிநொச்சி  கூட்டுறவாளர்  மண்டபத்தில்  நடைபெற்றது .    10-11-2016  காலை  ஒன்பது  மணியளவில் ஆரம்பமாகிய  இன்  நிகழ்வில்  கிளிநொச்சி  பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட  மிகவும்  சிறப்பாக செயற்பட்ட  மற்றும்  சட்டவிரோத  செயற்பாடுகளை  தடுத்தமை தொடர்பாக  பொலிஸ்  நிலையங்களில் பதியப்பட்ட  வழக்குப்   பதிவுகளின்  அடிப்படையில்    50  பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கு  இன்று  ஊக்குவிப்புப் பரிசில்களாக  பணப்பரிசில்கள்  வழங்கப்பட்டுள்ளன

தெரிவு செய்யப்பட்ட  பொலிஸ்  உத்தியோகத்தர்களில்  மிகவும் சிறப்பாக செயற்பட்டு  முதல்நிலையில்  உள்ள  தர்மபுரம்  பொலிஸ்  நிலையைப்  பொறுப்பதிகாரி  டி .எம்  சத்துரங்க அவர்களுக்கு  அறுபதாயிரம் ரூபாய்க்கு  மேலான  பணத்தொகை பரிசில்களாக  வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  முல்லைத்தீவிற்கான  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  மகேஷ் வெலிகன்ன தெரிவித்தார்
kilinochchi-police-8

இன்  நிகழ்வில்  கிளிநொச்சி  முல்லைத்தீவிர்கான  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  மகேஷ் வெலிகன்ன, சிரேட்ச பொலிஸ் அத்தியட்சகர்  பாலித்த சிறி ஆர்  சிறிவர்த்தன,  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச ,  தலைமைப் பொலிஸ்  அதிகாரி  ஜெசாந்த டி சில்வா, கரைச்சிப் பிரதேச செயலாளர்  நாகேஸ்வரன் , பொலிஸ்  உத்தியோகத்தர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *